Feeds:
Posts
Comments

Archive for the ‘TAMIL’ Category

கிளிநொச்சியில் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு தலைவர்ருடனான பத்திரிகையாளர் சந்திப்பில் குகநாதன். கோவைப்படம்:- வின்சென்ற் ஜெயன்

மூத்த பத்திரிகையாளர் குகநாதன் குண்டர்களின் தாக்குதலுக்கு உள்ளகியிருப்பதை சிவராம் ஞாபகார்த்த மன்றம் வன்மையாக கண்டிக்கின்றது.

ஜனநாயகம் சூழல் உருவாகியுள்ளது என்று அரசு கூறிவரும் இவ்வேளையில் ஊடகங்களுக்கெதிரான பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
நீண்ட கால போர் சூழலில் சிக்கியிருந்த இலங்கை ஊடகத்துறை தற்போது சுதந்திரமாக செயற்பட வாய்ப்புக்கள் கிடைத்திருப்பதாக அவ்வப்போது அரசாங்க தரப்பு தெரிவித்தும் வருகின்றது.
எனினும் ஊடகத்திற்கெதிரான பயரங்கரவாதத்திற்கு துணைபோகின்றவர்களையும், சம்பந்தப்பட்டவர்களையும் சட்டத்திற்கு முன் நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று சொல்லுமளவிற்கு நிலைமைகள் இருக்கின்றன, இதற்கிடையில் ஊடகத்திற்கொதிரான பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்களையும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு அவர்களும் முடக்கப்பட்டுள்ளனர்.
இதனால் ஊடகத்துறை தொடர்பான விழிப்புணர்வற்ற ஒரு சமூகம் இலங்கையில் கட்டியெழுப்பப்பட்டு வருகின்றது. ஊடகவியலாளர்களின் பணிகள் கொச்சப்படுத்தப்பட்டு வருகின்றது. ஒரு சமூகச் சீரளிவை நோக்கிய இருண்ட சமூகம் உருவாக்கப்பட்டுவருகின்றது.
தவிரவும்
ஞானசுந்தரம் குகநாதன் பல போர்ச் சூழ்நிலைகளின் மத்தியில் ஊடகத்துறையில் பணியாற்றியுள்ளார், பல வரலாற்றுக் காலங்களையும், பல வரலாற்று நிகழ்வுகளையும் கண்டும் அனுபவித்தும், சகித்தும், சாதித்தும், எதிர்த்தும், எழுதியும் உள்ளார். பல அரசியல் தலைவர்களிடம் மரியாதைக்குரியவராகவும், செல்வாக்குள்ளவராகவும் இருக்கின்றார். இவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஊடகத்துறைக்கு மட்டுமல்ல வரலாறுகளை நேசிப்பவர்களையும் ஜனநாயகத்தை மதிப்பவர்களையும் அச்சுறுத்துவதாகவே அமைந்துள்ளது.
பல தொடர்ச்சியான தாக்குதல் முயற்சிகள் ஞானசுந்தரம் குகநாதன் மீது மேற்கொள்ளப்பட்ட போது தொய்வதீனமாக தப்பிபிழைத் அவர் தொடர்ந்தும் குடாநாட்டை விட்டுவெளியேறாது தற்துணிவுடன் வாழ்ந்து வந்தார். இந் நிலையில் தூர்ரதிஸ்டவசமாக வெள்ளிக்கிழமை (29.07.2011) தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார் என்ற செய்தி எம்மை கவலைக்குள்ளாக்கியுள்ளது.
அறிக்கைகளில் கூறப்படும் ஜனநாயக சூழ்நிலை உண்மையாகவே உருவாக்கப்பட வேண்டும்.
Advertisements

Read Full Post »

உதயன்
news

உதயன் நாளிதழின் செய்தி ஆசிரியர் ஞா.குகநாதன் ஆயுததாரிகள் இருவரால் மிலேச்சத்தனமாகத் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்தார். யாழ்.

போதனா வைத்தியசாலையின் அவசர பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நேற்றுப் பகல் வேலை முடிந்து அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இரவு 7.30 மணிக்கு இந்தப் பயங்கரம் இடம்பெற்றது. நாவலர் வீதியில் கஸ்தூரியார் வீதி சந்திக்கும் மனோகரா தியட்டர் சந்திக்கும் இடைப்பட்ட பகுதியில் அவரைப் பின்தொடர்ந்து சென்ற இருவர் அவர் மீது இந்த மிலேச்சத்தனமாக தாக்குதலை நடத்தி உள்ளனர். மேலும் வாசிக்க 

Read Full Post »

இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்துடன் இணைந்து சுவிஸ் - சிவராம் ஞாபகார்த்த மன்றம் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டத்தின் ஒரு அங்கம்

இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்துடன் இணைந்து சுவிஸ் - சிவராம் ஞாபகார்த்த மன்றம் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டத்தின் ஒரு அங்கம்

கடந்தகால யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் குடும்ப அங்கத்தவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்துடன் இணைந்து சுவிஸ் – சிவராம் ஞாபகார்த்த மன்றம் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. கடந்த கால யுத்தத்தின்போது வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் பாதிப்புக்கு இலக்கான 10 ஊடகவியலாளர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு முதற் கட்டமாக தலா பத்தாயிரம் ரூபாய் வழங்கி வைக்கப்பட்டது.

யாழ் வை.எம்.சி.ஏ. கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நகழ்வில் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் ஆர்.பாரதி, உபதலைவர் அ. நிக்சன், ஒன்றியத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை ஆகியோர் இந்நிகழ்வுக்காக கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்றிருந்தனர். அதேவேளையில், ஒன்றியத்தின் வடபகுதி உறுப்பினர்களான என். பரமேஸ்வரன், ஆர். தயாபரன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

நிகழ்வின் ஆரம்பத்தில் அறிமுக உரையை நிகழ்த்திய அ. நிக்சன், பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு உதவி வழங்கும் திட்டத்தின் முதற் கட்டமாக படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ரஜிவர்மனின் குடும்பத்தினருக்கு உதவி வழங்கப்பட்டதாகவும் அதன் அடுத்த கட்டமாகவே இப்போது பத்து ஊடகவியலாளர்கள் அல்லது அவர்களுடைய குடும்பத்தினருக்கு உதவிகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். தற்போiது வழங்கப்படும் உதவித்தொகை அடைய இது வெறுமனே ஒரு அடையாளமாகவே வழங்கப்படுவதாகவும் தெரிவித்த அவர், குடும்பத் தலைவர்களாக இருந்த ஊடகவியலாளர்களை இழந்த குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதனையடுத்து உரையாற்றிய ஆர்.பாரதி, யுத்த காலத்தில் ஏற்பட்ட அனர்த்தங்களால் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் குடும்பத்தினருக்கு உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு சுவிட்சர்லாந்திலுள்ள சிவராம் ஞாபகர்த்த மன்றம் முன்வந்திருப்பதையிட்டுத் தெரிவித்ததுடன், காலத்தின் தேவையை உணர்ந்து அவர்கள் மேற்கொண்டுள்ள பணியைப் பாராட்டினார். தற்போது வழங்கப்படும் உதவி, பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் துன்பங்களில் நாமும் பங்குகொள்கின்றோம் என்பதற்கான ஒரு அடையாளமாக மட்டுமே உள்ளதாகவும் தெரிவித்த அவர், இந்தக் குடுப்பங்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வைக்கண்டு அவர்கள் கௌரவமாக வாழக்கூடிய ஒரு நிலையை எற்படுத்தும் வகையில் அடுத்த கட்டச் செயற்பாடுகள் அமைந்திருக்கும் எனவும், அதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் உதவிகளைப் பெற்றுக்கொண்டவர்கள் யுத்த காலத்தில் தமது சொத்துக்களையும் இழந்து, காயமடைந்தவர்கள். அதனைவிட குடும்பத்தலைவர்களாக இருந்த ஊடகவியலாளர்களை இழந்த குடும்பத்தினருக்கும் உதவிகள் வழங்கப்பட்டன. அந்த விபரங்களை உள்ளடக்கிய பட்டியல் தனியாக இணைக்கப்பட்டுள்ளது. மன்னார், கிளிநொச்சி போன்ற பகுதிகளிலுள்ள ஊடகவியலர்களின் குடும்பத்தினர் சிலர் போக்குவரத்துப் பிரச்சினைகள் காரணமாக நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. அவர்களுக்கான உதவிகள் வெள்ளி ஈழநாதம் ஆசிரியர் ராதேயன் மூலமாக அவர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஊடகவியலாளராகப் பணியாற்றிய தனது கணவரை இழந்த பெண் ஒருவர் வவுனியா மெனிக் பாம் முகாமிலிருந்து இந்த நிகழ்வில் பங்குகொள்வதற்காக வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வின் இறுதியில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. அதன்போது ஊடகவியலாளர்களின் குடுப்பங்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. குடும்பத் தலைவர்களாக இருந்த ஊடகவியலாளர்களை இழந்த குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு எவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும் என்பதையிட்டு கருத்துக்கள் பரிமாறப்பட்டன. இதில் அவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பாகவும், சுயதொழில்வாய்ப்புக்களுக்கான வாய்ப்புக்களைக் கண்டறிவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. அதன்அடிப்படையில் அடுத்த கட்டச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது

Read Full Post »

சிவராம் ஞாபகார்த்த மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் செ. கவிதரன் தாக்கப்பட்டுள்ளார். இத் தாக்குதலை சுவிஸ் சிவராம் ஞாபகார்த்த மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது. வழக்கம் போன்றே இனந்தெரியாதோரின் தாக்குதலுக்கு இலக்கானார் என்ற விளக்கத்துடன் இந்தச் சம்பவமும் மூடி மறைக்கப்பட்டுவிடும் என்பதை ஊகிப்பது கடினமில்லை. ‘யுத்தம் முடிவடைந்து அமைதி நிலைநாட்டப்பட்டு விட்டது’ என அரசாங்கம் பிரகடனப்படுத்தி இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் முடிவடைந்து விடவில்லை என்பதை இச் சம்பவம் மீண்டுமொருமுறை நினைவுபடுத்தி நிற்கின்றது.

அரசாங்கத்தின் நேரடி உத்தரவின் பேரிலோ அன்றி அதன் கைக்கூலிகளாலேயோ இத்தகைய தொடர்ச்சியான தாக்குதல்கள் ஊடகவியலாளர்கள் மீது நிகழ்த்;தப்பட்டு வரும் நிலையில் அதே அரசாங்கத்திடமே ஊடகவியலாளர்களைப் பாதுகாக்குமாறோ, தாக்குதலாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறோ கோருவது நகைப்புக்கிடமானது. கடந்த காலங்களில் இதுபோன்ற பல தாக்குதல்களில் நூற்றுக் கணக்கான ஊடகவியலாளர்களும் ஊடகப் பணியாளர்களும் இலங்கைத் தீவு முழுவதிலும் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ள போதிலும் இதுவரையில் ஒருவர் கூட கைது செய்யப்படவோ சட்டத்தின் முன் நிறுத்தப்படவோ இல்லை. யுத்தத்தில் நேரடியாகச் சம்பந்தப்பட்டிராத 35 க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களும் ஊடகப் பணியாளர்களும்; இதுவரை படுகொலை செய்யப் பட்டுள்ளார்கள். பலர் கடத்தப்பட்டுக் காணமாற் போயுள்ளனர். பல ஊடக நிறுவனங்கள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன.

இத்தகைய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஆட்சியாளர்கள் மீதே குற்றஞ் சாட்டப்பட்டு வந்துள்ளமையை மறைப்பதற்கில்லை. இலங்கையில் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்துவதில் அரசாங்கம் அக்கறையின்றிச் செயற்பட்டு வருகின்றமையை இது உறுதி செய்கின்றது. இந்நிலையில், சர்வதேச ஊடக அமைப்புக்களும் உள்நாட்டில உள்ள குடிசார்; அமைப்புக்களுமே ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்வரவேண்டியது அவசியமாகின்றது.

ஒரு ஜனநாயக சமூகத்தில் ஊடகவிலாளர்களின் பங்களிப்பு முக்கியமானது. ஊடகவியலாளர்கள் தமது சமூகப் பொறுப்பை உணர்ந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றும் போதே குறித்த சமூகம் ஆரோக்கியமான கலந்துரையாடல்கள் நிகழும் வளமான சமூகமாகப் பரிணமிக்கும். ஆரோக்கியமான சமூகத்தைக் கனவு காணும் ஒவ்வொருவரும் ஊடக சுதந்திரத்தையும் ஊடகவியலாளர்களையும் காப்பாற்ற முன்வரவேண்டும். பல்லின சமூகங்கள் வாழும் இலங்கை போன்ற நாடுகளில் இதன் தேவை ஏனைய நாடுகளை விட அதிகம் என்பதை அனைவரும் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும் என சிவராம் ஞாபகார்த்த மன்றம் கேட்டுக் கொள்கின்றது.

Read Full Post »

NSLJA express concern on post election violence

NSLJA express concern on post election violence

North Sri Lanka Journalists Association (NSLJA) expresses is grave concern on increasing violence against media and opposition political activists in the election post period. We earnestly hope that normalcy will return to whole country and rule of law will prevail which is a necessary pre condition for long awaited peace and reconciliation.

North of Sri Lanka has witnessed peoples rights being violated for a long time, our media and journalists faced unprecedented repression during the last few years. We express solidarity with our brothers and sisters in the south of Sri Lanka, who are undergoing the same situation we faced for a long time. We express our contentment that ban on Lanka newspaper has been lifted by the judiciary and hope that its editor Chandana Sirimalwattaa will be released soon. NSLJA condemn all acts against media unconditionally.

We express our concern that pre election period too was marred by violence unleashed against political opponents, a trend Tamil people has witnessed for such a long time.

The bomb explosions took place within the Jaffna peninsula on the day of the 2010 Presidential Election brought wartime memories to the people and fears of a violence-filled poll. It discouraged the people from voting who had voted in earlier elections solely on the question of war and peace.

Tamil media in Jaffna gave an unprecedented prominence to the visiting ministers and their programmes with a large number of war-affected people seeking relief for tracing their missing relatives or compensation for their lost property. This led to a situation where journalists in the peninsula paid little attention to carrying the message of other candidates towards the people.

It is commendable the journalists carried out their duties with a sense of responsibility despite the risks they faced but the people were largely fearful about expressing their political opinion publicly. It must be mentioned that inadequate transport facilities and security checks caused delays for journalists to go around polling booths to report on the election.

This election period brought the memories of qualitative peninsula journalism which boasts of a long history and its eminent stalwarts. It was clear that we are yet to achieve those standards after long years of war. At the same time we need to remind that 15 journalists and media workers have been killed in peninsula in recent past. Many experienced journalists have fled the country or left the journalism for safety of their lives. All these acts of violence against Jaffna media has taken it toll.

We urge the government to launch fresh investigations to all the journalists killed in North during the last few years, bring the culprits to book and to show by example that government is willing to establish the rule of law.

Therefore we expect President Mahinda Rajapaksa who has been re-elected to the office to ensure that the peninsula journalists will enjoy the media freedom in order help the people and people’s organisations to shed their fear to express their political opinion freely.

தேர்தல் வன்முறைகளை கண்டிக்கின்றோம்,தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு இயல்பு வாழ்க்கை

தேர்தல் காலத்தில் ஊடகங்களுக்கு எதிராகவும் எதிர் கருத்துடையவர்களுக்கு எதிராகவும்  அதிகரித்திருந்த வன்முறைகளு வடஇலங்கை பத்திரிகையாளர் சங்கம் ஆழ்ந்த கவலையடைவதுடன் அதனை வன்மையாக கண்டிக்கின்றோம். நீண்ட காலமாக சமாதானத்தையும் இணக்கப்பாட்டையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நாம் நாடு முழுவதுமாக இயல்பு வாழ்க்கை திரும்பி சட்டமும் ஒழுங்கும் கடைப்பிடிக்கப்ட வேண்டுமென மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ளோம்.
தேர்தல் தினத்தன்று குடாநாட்டில் இடம் பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்கள் யுத்த காலகட்ட நினைவிற்கு தூக்கிச் சென்றதுடன். வன்முறைகள் அதிகமாக இருக்கலாம் என்ற பீதியை ஊடகவியலாளார்கள் மத்தியிலும் ஏற்படுத்தியிருந்தது. இத் தேர்தலில் சற்று ஆர்வம் காட்டியிருந்த மக்கள் சற்றுபின்வாங்கியிருந்ததை அவதாணிக்க முடிந்தது.
ஏனெனில்
கடந்த காலங்களில் எந்த ஒரு தேர்தலையும் தமிழ் மக்கள் சமாதானமா? போரா? என்ற அடிப்படையிலேயே நோக்கிவந்தனர், யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து இக் கருத்து வாழ்க்கையா? களியாட்டமா? என்ற நிலைக்கு மாற்றமடைந்தது.
கடந்த யுத்த காலங்களில் ஏற்பட்ட சொத்து இழப்புக்கள், இழந்த குடியிருப்புக்கள், மற்றும் உறவினர்களின்(காணாமல்போனோர்) நிலைமைகள் தொடர்பான கவலை மக்களை சூழ்ந்திருந்தமையினால், அமைச்சர்களின் வருகையும், மற்றும் வேலைத்திட்டங்களையும் தமிழ் ஊடகங்கள் என்றுமில்லாதவாறு முக்கியமாக கருதின.
இதனால் மற்றைய கட்சிகளின் கருத்துக்கள் மக்களிடம் சென்றடைவதற்கான பொறுப்பிலிருந்து குடாநாட்டு ஊடகவியலாளர்கள் சற்று விலகியே நின்றனர் என கூறலாம்.
வார்த்தை பிசகினால் ‘பொது அமைதிக்கு பங்கம் ஏற்றபட்டுவிடும்” என சிந்திக்கும் பொறுப்புள்ள ஊடகவியலாளன் ‘உயிர் பிரிந்துவிடும்” என சிந்திக்கும் நிலையிலும் தமக்கான பணிகளை செய்யத் தவறவுமில்லை.
எனினும் தேர்தல் தொடர்பான வெளிப்படையான கருத்துக்களை மக்களும் வெளியிடுவதற்கு அச்சப்பட்ட நிலையில் தயங்கி நின்றனர்.
தவிரவும்
தேர்தல் தினத்தன்று சகல வாக்களிப்பு நிலையங்களுக்கும்?தொகுதிகளுக்கும் சென்று (போக்குவரத்து,சோதனை நடவடிக்கை)நிலைமைகளை பார்வையிடுவதற்கான வாய்ப்புகள் குடாநாட்டு நிலைமையில் கடிணமாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு பொருமையையும் புகழ்ச்சியையும் தேடித்தந்த குடா நாட்டு ஊடகத் துறை நீண்ட வரலாற்றையும் சிறந்த அறிவாளிகளையும் கொண்டிருந்த நிலைமையிலிருந்து எவ்வளவு தூரம் பின்தங்கி விட்டது என்பதை சட்டென உணர்த்தும் விதமாக இத் தேர்தல் காலம் அமைந்தது என சுருக்கமாக கூறவிரும்புகின்றோம்.
சுமார் 15 ஊடகவியலாளர்களை குடாநாட்டு ஊடகத்துறை ஆயுதமுனையில் இழந்ததுடன் அனுபவமிக்க சிலர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுமுள்ளனர்.
எனவே அதிகப் பெரும்பான்மை வாக்குகளினால் வெற்றி பெற்றுள்ள ஜனாதிபதி அவர்கள் கடந்த காலங்களில் ஊடகத்துறை மீதான வன்முறைகள் தொடர்பாக ஏற்பட்ட குற்ற சாடடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, நிறுவனங்கள்,பொது அமைப்புக்கள் மற்றும் மக்கள் கருத்துக் கூறுவதற்கு அச்சப்படும் நிலையை மாற்றி அமைக்க பாடுபடும் குடாநாட்டு ஊடகத்துறையினருக்கு, தனது இரண்டாவது ஆட்சிக்காலத்தில் ஆதரவளிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.
லங்க நியூஸ்பேரின் சிறிய கால தடைக்கு வருந்துவதுடன் அதன் ஆசிரியர் சந்தன ஸ்ரீமல்வத்த  மிக விரைவில் நீதியின் முன் நிறுத்தப்பட்டு விடுவிக்கப்டுவார் என நம்புகின்றோம்.
நாங்கள் நீண்ட காலமாக அனுபவித்ததை நீங்களும் அனுபவிக்கிறீர்கள், வட இலங்கை மக்கள் நீண்ட காலமாக உரிமைமீறல் சம்பவங்களையும், வன்முறைகளையும் அனுபவித்துவருகின்றோம். அதேவேளை எமது ஊடகத்துறையினரும் கடந்த காலங்களாக அடக்கு முறைக்கு முகம் கொடுத்தவர்களாகவும் உள்ளோம். எமது சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமையாக வாழ விரும்புகின்றோம் என்பதை தென்பகுதி மக்களுக்கு கூறிக்கொள்கின்றோம்.

Read Full Post »

P.DevakumarP.DevakumarP.DevakumarP.Devakumar

சக்தி செய்தியாளர் பரநிருபசிங்கம் தேவகுமார் (வயது-34) என்பவர் கூரிய ஆயதங்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஐந்து வருடங்களுக்குமதிகமாக சக்தியின் யாழப்பாணச் செய்தியாளராக கடமையாற்றிய இவர் கோயில் திருவிழாக்கள் உட்பட குடாநாட்டின் விளையாட்டு நிகழவுகள் மற்றும் பொது நிகழ்வுகளில் அக்கறையுடன் செயற்பட்டுவந்த போதிலும் அரசியல் ரீதியான அறிக்கையிடல்களை குடாநாட்டு சூழ்நிலை காரணமாக தவிர்த்து வந்தார் என்றும் தெரிவிக்கப்டுகின்றது.

இறுதியாக குடாநாட்டில் நிகழ்த்தப்பட்ட வெசாக் மற்றும் காணிவேல் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை அறிக்கையிட்டிருந்தார்.

சம்பவ தினமன்று தமது பணிகளை முடித்துவிட்டு அயல் வீட்டு நண்பருடன மோட்டார் சயிக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது யாழ் நகரின் மேற்குபகுதியான கல்லுண்டாய் வெளிப்பகுதியில் வழிமறித்த கொலையாளிகள் வெட்டிக் கொலை செய்தபின் அவரிடமிருந்த ஆவனங்களையும் எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வருடமே திருமணமாகிய இவரின் மனைவி தற்போது கருவுற்றிருக்கின்றார் என்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.

Press release / 28th May 2008

Journalist hacked to death in Jaffna

28th May 2008, Colombo, Sri Lanka: The Free Media Movement (FMM) reports with deep sadness that yet another journalist was murdered today in Jaffna, in the embattled Northern Province of Sri Lanka. The FMM vehemently condemns this dastardly act and extend our condolences to his wife and family.

Sirasa, Shakthi and MTV Television Network Jaffna district correspondent P. Devakumar was hacked to death this evening in Navanthurei on his way home from Jaffna town. A friend of Devakumar was also killed by in the attack.  Devakumar, a resident of Vaddukoddai, Jaffna , was 36 years old and married for one year. He had worked for MTV for nearly three years. 

We note that Devakumar is the 9th journalist/media worker killed in Jaffna since 2006 and that three more journalists/media workers have been abducted in Jaffna since the same year.

Jaffna, the main city in the embattled Northern Peninsula of Sri Lanka, has been under government military control for over a decade and is heavily policed and fortified. However, not a single disappearance, abduction or murder of a journalist / media worker has been investigated that has brought those responsible to book. We are fearful that investigations into Devakumar’s murder will also suffer a similar fate.

It is with sickeningly increasing frequency that we are compelled to ask the government to take concrete measures to halt the killing, assault and intimidation of journalists in Sri Lanka . Vociferous condemnations and promises of inquiries are meaningless without the political will to push forward investigations.

Devakumar’s death must be investigated urgently, meaningfully and impartially. The repugnant impunity that aids and abets violence against journalists and media personnel must come to an end.

Read Full Post »

மல்லாவி பகுதியில் இடம் பெற்ற கிளைமோர் தாக்குதலில் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள பணிப்பாளர் உயிர் இழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
கிளிநொச்சி மாவட்ட வெள்ளாங்குளம் துணுக்காய் வீதியில் நேற்று இரவு 8.00 மணியளவில் இடம் பெற்றதாக சொல்லப்படுகின்ற மேற்படி கிளைமோர் தாக்குதலிலேயே கடற் தொழில் திணைக்களத்தின் மன்னார் மாவட்ட பணிப்பாளர் ஜோசப் போல் யூலியன் உயிர் இழந்திருக்கிறார்.
 
இதே வேளை மேற்படி கிளைமோர் தாக்குதலில் அடம்பன் சுகாத வைத்திய அதிகாரியின் பிக்கப்ரக வாகனம் இலக்காகி உள்ளதாகவும் அதில் பயணித்த தாதியர் பரிசாரகரான சாந்தகுமார் என்பவர் உயிர் இழந்துள்ளதாகவும் இவரது சடலம் மல்லாவி வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
 
வாகனத்தின் சாரதியான சசிசேகரன் காயமடைந்த நிலையில் வெள்ளாங்குளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிகின்றது.
 
சுகாதார திணைக்களத்திற்கு சொந்தமான மேற்படி வாகனம் கடமை நிமித்தம் மன்னாரிற்கு வந்து நேற்று மாலை ஓமந்தை ஊடாக மீளத்திரும்பிச் சென்ற வேளையிலேயே கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

Read Full Post »

Older Posts »