கடுமையான யுத்தம் இடம் பெற்று வரும் மன்னார் பகுதியில் கடற் தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் ஐவரை விடுதலைப் புலிகள் அழைத்துச் சென்றுள்ளதாக தொழிலாளர்களின் உறவினர்களால் மன்னாரில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் பிற அமைப்புக்களிடம் முறையிடப்பட்டுள்ள இச்சம்பவம் பற்றி விபரிக்கப்ட்டுள்ளதாவது.
மன்னார் பள்ளிமுனைப் பகுதியில் இருந்து புதன் கிழமை (12-03-2008) கடற் தொழில் நிமித்தமாக மன்னாரின் வடபகுதி கடற்பரப்பிற்கு இரண்டு படகுகளில் ஏழு பேர் சென்றிருந்தனர் என்றும், அவர்களில் 5 பேரை விடுதலைப் புலிகள் அழைத்துச் சென்றுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படும் இவ் முறைப்பாட்டில் விடுவிக்கப்பட்ட இருவரும் திருமணமானவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இவர்களை விடுவித்துத் தரும்படி சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், மன்னார் பிரதான பொலிஸ் நிலையம், சகவாழ்வு மன்றம், பிரஜைகள் குழு ஆகியவற்றில் இவர்களது உறவினர்களால் முறைப்பாடாக பதியப்பட்டுள்ளது.
Advertisements
Leave a Reply