மன்னார் பகுதியிலும் வெள்ளத்தின் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் யுத்த அனர்த்திற்கு உள்ளாகியிருக்கும் இம் மக்கள், வெள்ளம் காரணமாக மீண்டும் இடம் பெயர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள் என்று மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மன்னாரில் தொடரும் மழையால் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் நிர்க்கதியான நிலைக்கு உள்ளாகி இருக்கின்றார்கள்.
சில தினங்களாக மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன இதனால் வீதிகள், பொது இடங்கள், பாடசாலை வளாகங்களில் நீர் தேங்கி நிற்பதையும் அவதானிக்க முடிகின்றது.
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் 1,532 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 6,359 பேர் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் அதே வேளை இம்முறை காலபோக செய்கை காரணமாக அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 1,167 ஏக்கர் நெற்செய்கை நிலப்பரப்பு நீரில் மூழ்கி உள்ளது.
இதே வேளை நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட 5,200 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 17,600 பேர் நிர்க்கதியாகி இருப்பதோடு சுமார் 10,500 ஏக்கர் நெற்செய்கை நிலப்பரப்பு நீரில் மூழ்கி உள்ளது.
இதே வேளை மாந்தை மேற்கு பகுதியில் 4,000 குடும்பங்களைச் சேர்ந்த 16,245 பேர் பாதிக்கப்பட்டதோடு 4,400 ஏக்கர் நெற்செய்கை நிலப்பரப்பு நீரில் மூழ்கி உள்ளஅதே வேளை மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவிற்கு உட்பட்ட இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் 300 குடும்பங்களைச் சேர்ந்த 1,290 பேர் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்
வங்கிக் கடன்கள் மூலமாக விவசாயத்தை மேற்கொண்டு வந்த விவசாயிகள் காலபோக செய்கையை பெரிதும் நம்பி இருந்த போதும் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக ஏமாற்றம் அடைந்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.
இதே வேளை
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட பள்ளிமுனை கிழக்கு பகுதியில் கடந்த 2005 ஆம் ஆண்டு குடியேற்றப்பட்ட 49 குடும்பங்களும் சில தினங்களாக பெய்து வருகின்ற மழை காரணமாக இடம் பெயர வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.
யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து சொந்த இடங்களுக்கு மீளத் திரும்பியவர்களில் நிரந்தர காணி மற்றும் வீடுகள் ஏதும் அற்றவர்களை இலக்காகக் கொண்டு சேவாலங்கா மன்றத்தின் வீட்டுத்திட்ட உதவியோடு மீள் குடியேற்றப்பட்டனர்
வீதிகள்இ வீட்டு வளவுகள் மற்றும் வீட்டின் உள்ளக பகுதிகள் என்பன முற்றுமுழுதாக வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன.
மேற்படி வீட்டுத்திட்ட பகுதிக்கு நேரில் சென்ற மன்னார் பிரதேச செயலாளர் திருமதி நந்தினி ஸ்ரான்லிடீமெல் அப்பகுதி மக்களோடு நிலைமைகளை பார்வையிட்டுள்ளhர்.
இதன்போது அவர் நிவாரண உதவிகளை பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்
Advertisements
Leave a Reply