பூநகரிப் பகுதியில் இன்று இலங்கை விமானப்படையினர் தாக்குதல் நிகழ்த்தியதில் நான்கு குழந்தைகள் உட்பட எட்டு பொதுமக்கள் இறந்துள்ளதாக கிளிநொச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை ஒன்பது மணியளவில் இத் தாக்குதல் நிகழ்ந்ததாகவும் இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று கொல்லப்பட்டதுடன் பதின்மூன்று போர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள
.
காயமடைந்தவர்கள் கிளிநொச்சி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை இன்று காலை யாழ் குடா நாட்டிலிருந்த இராணுவ முகமிலிருந்து எறிகனைத் தாக்குதல்கள் பூநகரிப் பகுதியை நோக்கி நிகழ்த்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடப்பட்டது.
பூநகரிப் பிரதேசத்தில் உள்ள கிராஞ்சி சிவபுரம் பகுதி மீது இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற விமானப்படையின் வான்குண்டுத் தாக்குதலில்இறந்தவர்களின் விபரம் வருமாறு:
1. கதிர்வேலு திருநீலகண்டன் (வயது 79)
2. கிராஞ்சியைச் சேர்ந்த ஆசிரியரான சிவாநந்தி (வயது 27)
3. விஜயகுமார் விதுயா (வயது 09)
4. இந்திரன் லதா
5. தமிழரசன் சுமதி (வயது 30)
6. சசிகரன் கவிதநாயகி (வயது 34)
7. சசிகரன் காதீபன் (வயது 04)
8. சசிகரன் தமிழ்வேந்தன் (வயது 06)
ஆகியோரே. இவர்களில் கவிதநாயகி, காதீபன், தமிழ்வேந்தன் ஆகிய மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
Advertisements
Leave a Reply